தமிழக அரசியலில் பரபரப்பு!!விஜயகாந்தை சந்திக்கும் ஸ்டாலின்!!
- நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.
- இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
பின் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக+ பாமக உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது.
நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம்.நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இன்று இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.