கூடுதலாக 25,000 இந்தியர்கள்…ஒப்புதல் அளித்தது சவுதி அரசு…..ஹஜ் புனித பயணிகள் மகிழ்ச்சி…!!

Default Image
  • சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
  • ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள கூடுதலாக 25,000 இந்தியர்களுக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.   

சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் இந்தியா வருகை புரிந்தார்.இதில் இந்தியா மற்றும் சவுதி_க்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.டெல்லியில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதில் ஆண்டுதோறும் ஒருமுறை இஸ்லாம் மக்களுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள  சவுதி நாட்டில் அனுமதி வழங்கப்படும். நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப 10 லட்சம் பேர் இருந்தால் ஆயிரம் பேர் என்ற கணக்கில் அனுமதி அளித்து வந்தது.இதையடுத்து

2012 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர்.பின்னர் ஆண்டுக்கு ஆண்டு மாற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக  25 ஆயிரம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கி சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வார்கள் என தெரிகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்