என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்-கமல்ஹாசன்
- திருவாரூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.திருவாரூரில் வாரிசு அரசியலுக்கும் குடும்ப அரசியலுக்கும் முடிவு கட்டுவோம்.
மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது. நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.