கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன்-மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
- அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
- அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன்.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே மனநிலையில் இல்லை,அதனால் தான் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.