தாடி பாலாஜி மீது மீண்டும் அவர் மனைவி புகார்…..!!!!
- காமெடி நடிகரான தாடி பாலாஜி, சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர்.
- பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- நித்யா, பாலாஜிக்கு 100 நாள் பரீட்சை ஒன்றை வைத்தார்கள்.
- பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காமெடி நடிகரான தாடி பாலாஜி, சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என எதிர்பார்த்தனர்.
இதனையடுத்து, நித்யா, பாலாஜிக்கு 100 நாள் பரீட்சை ஒன்றை வைத்தார்கள். தற்போது அந்த நூறு நாட்களும் முடிந்த நிலையிலும் இவர்கள் ஒன்றாக இணையவில்லை.
இந்நிலையில், பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.