திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது  – ஜவாஹிருல்லா

Default Image
  • திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நேற்று முன்தினம் முடிவாகி தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
  •  திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது  என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. அடுத்தடுத்த கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்