ஸ்விக்கி-இப்படியெல்லாமா செய்வாங்க! ஆத்தி.. இத பாத்து சிரிக்கறதா..? இல்ல அழுவுறதா!?

Default Image

தற்போதைய சூழலில் எல்லாமே ஆன்லைன் மயமாகவே மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் ஆன்லைன் ஆர்டர் தான். சின்ன கைப்பை முதல் பெரிய வீட்டு பொருட்கள் வரை எல்லாவற்றையும் நாம் தேடும், பொது தளமாகவே இவை மாறிவிட்டன.

இது ஒரு வகையில் நல்லது தான் என்றாலும் இதனால் பல சிறு வணிகங்கள் நிச்சயம் பாதிக்கப்படும். சிறு வணிகர்களை விட இந்த ஆன்லைன் பர்சேஸிங் தான் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் எண்ணினால் உங்களுக்கு தான் இந்த பதிவின் சம்பவம்.

ஸ்விக்கி
தற்போது ஆன்லைனில் உணவு விற்கும் சந்தையில் கொடிகட்டி பறப்பவர்களில் முதல் இடத்தில் உள்ளது ஸ்விக்கி நிறுவனம். இந்த ஸ்விக்கியில் தான் இப்போது ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதுவும் 2000 கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி இந்த சம்பவம் நடந்துள்ளது.


என்ன சம்பவம்?
அதாவது சென்னையில் உள்ள ஒருவர், ஸ்விக்கியில் அவரின் வீட்டு அருகில் உள்ள கடையில் உணவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், இந்த ஆர்டரை ராஜஸ்தானில் உள்ள இதே பெயரை கொண்ட வேறொரு கிளை கடையில் பதிவாகிவிட்டது. இதை அந்த ராஜஸ்தான் கடை உரிமையாளரும் ஆர்டராக எடுத்து கொண்டு டெலிவரி செய்யும் படி தனது ஊழியரிடம் கூறியுள்ளார்.


இப்படியுமா நடக்கும்!?
2000கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த ராஜஸ்தான் கடையின் டெலிவரி பாய் 12 நிமிடத்தில் சென்னையில் ஆர்டர் செய்தவரின் வீடு தேடி வந்துவிடும் எனவும் ஸ்விக்கி செயலியில் குறிபிடப்பட்டுள்ளது. இதை பார்த்த அந்த ஆர்டர் செய்த கஷ்ட்டமர் ஆச்சரியத்திலும் பூரிப்பிலும் மூழ்கி விட்டார்.


ட்விட்டர்
இதை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு ட்ரெண்டாக மாற்றி விட்டார். இதை பலரும் பார்த்து ரீட்வீட் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை ஸ்விக்கி நிறுவனம் கூறுகையில், இது தொழிற்நுட்ப கோளாறால் ஏற்பட்டுள்ளது. இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என உறுதி அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்