இந்தியாவில் சவுதிஅரேபியா 100 பில்லியன் வரை முதலீடு செய்ய திட்டம்!!
- சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியா வந்துள்ளார்.
- இந்தியா – சவுதி அரேபியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
- இந்தியா, சவுதி இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- சவுதி அரேபியாவின் முதலீட்டால் இந்திய பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதில் இந்தியா – சவுதி அரேபியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மா முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், இந்தியா, சவுதி இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.
பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகள் கை கொடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.பயங்கரவாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை புல்வாமா தாக்குதல் உலகிற்கு காட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சவுதிஅரேபியா 100 பில்லியன் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சக்தி, பெட்ரோல், உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய சவுதி அரசு திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியாவின் முதலீட்டால் இந்திய பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.