சிறந்த காதல் துணையை தேடி கொள்ள இந்த 4 ஆப்ஸ்கள் போதும்! இதில் எது பெஸ்ட்டு தெரியுமா?

Default Image

காதல் என்றாலே சமீபத்தில் வந்த “96” படத்தை தான் பலரும் கை காட்டுவார்கள். காதல் என்கிற உணர்வு இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. காதல் ஒரு லேசான உணர்வு. இப்படி காதலை பற்றி பல வரிகளை சொல்லி கொண்டே போகலாம். புறாவின் மூலம் தூது விட்டு காதலை வளர்த்தது அந்த காலம்.

தற்போது வாட்சப், முகநூல் போன்றவற்றின் மூலமாக தூது விட்டு தங்களது காதலை வளர்கின்றனர். இது முகம் தெரிந்த நபர்களிடம் பேசுவதற்கு பயன்படுத்தும் ஒரு வழியாக உள்ளது. ஆனால், முகம் தெரியாத இதுவரை பார்த்திராத நபர்களிடம் காதல் வயப்பட சில வழிகள் உண்டு. இந்த வசதியை ஏற்படுத்தி தருவதற்கே இந்த 4 ஆப்ஸ்கள் உள்ளன.


டிண்டர் (Tinder)
பல்வேறு வகையான டேட்டிங் ஆப்ஸ்களில் முதல் இடத்தில் இருப்பது டிண்டர் தான். இதில் நீங்கள் இருக்கும் இடத்தையும் உங்களின் விருப்பத்தையும் வைத்தே உங்களுக்கான நபரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உங்களையும் அவருக்கு பிடித்தால் இருவரும் பேசி கொண்டு, கால போக்கில் புரிதல் உண்டாகினால் சேர்ந்து பயணிக்கலாம்.


ஹேப்பன் (Happn)
இந்த டேட்டிங் செயலியும் உங்களின் இருப்பிடத்தில் உள்ளவர்களை வைத்தே உங்களுக்கு பரிந்துரை செய்யும். இதில் உங்களுக்கு பிடித்தமானவற்றை நீங்கள் சேர்த்து கொள்ளலாம், உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்த நிறம், சாப்பாடு, இடம் போன்ற பலவற்றை இதில் சேர்க்கலாம்.

ஒகே குயுபிட் (okcupid)
இது முற்றிலும் மாறுபட்ட ஒரு செயலி. இந்த செயலியில் உங்களுக்கென்று சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும், அதற்கு நீங்கள் கொடுக்கும் கேள்வியின் அடிப்படையில் உண்கலக்கான சிறந்த ஜோடி கிடைக்கும். மேலும், இதுவும் டிண்டர் செயலியை போல ஒரு டேட்டிங் செயலிதான்.

கிரிண்டர் (Grindr)
மற்ற செயலிகளை காட்டிலும் இது முழுவதுமாக வேறுபட்டது. இதில் கே, லெஸ்பியன் போன்ற அனைத்து தரப்பினருக்கும் ஜோடி தேடி கொள்ளலாம். தன்னை போலவே எண்ணங்கள், விருப்பங்கள் கொண்டோருக்கு இந்த Grindr செயலி மிக உதவியாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்