திமுக-காங் கூட்டணி வெற்றியை தடுக்க பாஜக_வுடன் கூட்டணி…தம்பிதுரை கருத்து…!!

Default Image
  • பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார் அதிமுகவின் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை .
  • திமுக_ காங் கூட்டணி வெற்றியை தடுப்பதற்க்காக அதிமுக-பாஜக கூட்டணி என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து , கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசும்போது மக்களின் பணத்தை கொள்ளையடித்த திமுகவும் இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க  இலங்கைக்கு உதவிய காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வர கூடாது என்பதற்க்காக கூட்டணி அமைத்துள்ளோம் என்று தம்பிதுரை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்