மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்_லுடன் சுதீஷ் மீண்டும் பேச்சுவார்த்தை….!!
- மத்திய அமைச்சர் நேற்றைய தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
- கூட்டணி தொடர்பாக தேமுதிக துணை செயலாளர் மூத்த நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
- அமைச்சர் தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்_லுடன் சுதீஷ் தொலைபேசியில் பேச்சுவார்த்தை
நாடாளுமன்றத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டி நேற்றைய தினம் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுக + பாஜக_உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.
இதையடுத்து விஜயகாந்தை சந்தித்த பின்பு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தேமுதிக_வின் துணை செயலாளர் சுதீஷ்_சுடன் பேசிக்கொண்டு இருந்தார். இந்நிலையில் தேமுதிக கூட்டணி தொடர்பாக இன்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்_சுடன் அமைச்சர் தங்கமணி தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் பின்னர் அமைச்சர் பேசியது குறித்து சுதீஷ் மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலுடன் பேசியதாகவும் தெரியவந்துள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக_வை விட ஒரு தொகுதியாவாது அதிகம் கொடுக்கவேண்டுமென்று சொல்லப்படுகின்றது.