பாகிஸ்தானியர் வெளியேற வேண்டும்…..48 மணி நேர கால அவகாசம் ராஜஸ்தான் அதிரடி…!!

Default Image
  • புல்வாமா தற்கொலை படை தாக்குதல் 
  • பாகிஸ்தானியர் வெளியேற்றம் 
  • ராஜஸ்தான் மாநிலம் அறிவிப்பு 
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லபட்டனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானெர் மாவட்டத்திலுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிக்கானெர் மாவட்டத்திலிருந்து பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் , அதே போல விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இரண்டு மாதங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது புல்வாமா மாவட்ட தற்கொலை படை தாக்குதலையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்