தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் ஆலோசனை…!!
- மத்திய அமைச்சர் நேற்றைய தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
- கூட்டணி தொடர்பாக தேமுதிக துணை செயலாளர் மூத்த நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
நாடாளுமன்றத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டி நேற்றைய தினம் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் அதிமுக + பாஜக_உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலையை விசாரித்ததாக பேட்டியளித்து விட்டு சென்றார்.
இதையடுத்து விஜயகாந்தை சந்தித்த பின்பு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தேமுதிக_வின் துணை செயலாளர் சுதீஷ்_சுடன் பேசிக்கொண்டு இருந்தார்.இந்நிலையில் தேமுதிக கூட்டணி தொடர்பாக இன்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் எத்தனை சீட் கேட்கலாம் என்று சொல்ல படுகின்றது.மேலும் தேமுதிக சார்பில் 9 தொகுதிகள் கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.