புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி-முதல்வர் நாராயணசாமி 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை!!
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியுடன் 3 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.
ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில் முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.
இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.தர்ணாவில் இருந்துகொண்டே அரசுப் பணிகளை கவனிக்கிறார்.இன்றும் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி 6வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் இன்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமியை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் அஷ்வினிகுமார், அனைத்துத்துறை செயலர்களும் பங்கேற்றுள்ளனர்.புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியுடன் 3 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.