திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத காரணத்தால் திமுகவை  கமல் விமர்சிக்கிறார் – ஜெ.அன்பழகன்

Default Image

திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத காரணத்தால் திமுகவை  கமல் விமர்சிக்கிறார் என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கமல் கருத்து:

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன். அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன்.

முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது. அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள்.

கிராமசபை கூட்டம் எத்தனை வருடமாக உள்ளது என்பது கூட தெரியாதா?. சின்ன பையன் அரசியலுக்கு வந்தபின்பு அதனை அப்படியே காப்பி அடிப்பது சரியா? .கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சொல்வது முறையல்ல.

Image result for கமல் ஸ்டாலின்

 

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அது தமிழகத்தை பாதிக்கும்.திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே திமுகவை விமர்சிக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திமுகவை விமர்சனம் செய்தார்.இது திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பதில் கருத்து:

Related image

இது தொடர்பாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கூறுகையில், திமுக கூட்டணியில் இடம் கிடைக்காத காரணத்தால் திமுகவை, ஊழல் கட்சி என்று கமல் விமர்சிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்