பாஜக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை
பாஜக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் திமுக கை காட்டுபவர்தான் பிரதமர் எனக்கூறும் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னர் நீங்கள் கை காட்டிய ராகுலையே யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தேர்தலுக்குப் பின்னர் திமுக கை காட்டமுடியாது .ஏனென்றால் உங்கள் கூட்டணி வெற்றி பெறப்போவதில்லை.
அதேபோல் பாஜக கூட்டணி குறித்தும், போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.