இனி எல்லாத்துக்கும் இந்த 112 எண் தான்! இதன் பின்னுள்ள அவசர தேவை என்னனு தெரிஞ்சிக்கோங்க…
ஆபத்திலோ அல்லது ஏதேனும் தேவைக்காகவோ சில அவசர எண்களை நாம் அழைப்போம். பெரும்பாலும் இந்த சேவை எண்கள் அரசு தரப்பில் வழங்கப்பட்டதாகவே இருக்கும். உதாரணத்திற்கு 100,108,1098,101 போன்ற எண்களை கூறலாம். இந்த எண்கள் அனைத்துமே நம்மை ஆபத்தில் இருந்து காக்க உதவும்.
ஆனால், வெவ்வேறாக இருக்க கூடிய இந்த அவசர சேவைகளை இனி ஒரே எண்களின் மூலம் இணைத்து விட அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே குடைக்குள் எல்லா அவசர கால சேவைகளையும் உங்களால் பெற இயலும். இந்த 112 எண்ணின் முழு விவரத்தை பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.
புது முயற்சி
தீ விபத்து, அம்புலன்ஸ், காவல்துறை புகார்கள் போன்ற எல்லாவற்றையும் அணுக இனி “112” என்கிற எண்ணை மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த அவசர கால சேவை இந்தியாவில் மொத்தம் 14 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
மற்ற நாடுகள்
எப்படி அமெரிக்கா போன்ற நாடுகளில் “911” என்கிற எண்ணை எல்லா அவசர தேவைக்கும் பயன்படுத்துகிறார்களோ அதே போன்று இந்தியாவிலும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் “112” பயன்பாட்டில் கொண்டு வரப்படுகிறது. இதை இணைதளம் அல்லது செயலி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். மேலும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளை உடனடியாக ஆபத்தில் இருந்து காக்க “ஷவுட்” என்கிற தேர்வும் உள்ளது.
இந்தியா
இந்தியாவில் ஏற்கனவே இந்த சேவை ஹிமாச்சல் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது. அந்த வகையில் பிற மாநிலங்களிலும் இதன் சேவையை அமலாக்க ரூ.321 கோடி 60 லட்சம் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. எனவே, இனி தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா, பஞ்சாப், தெலுங்கானா உட்பட 14 மாநிலங்களுக்கு இந்த திட்டம் அமலுக்கு வர போகிறது.