ரஜினியின் அறிக்கை பாஜகவுக்கு எதிரானது கிடையாது-தமிழக பாஜக தலைவர் தமிழிசை
ரஜினியின் அறிக்கை பாஜகவுக்கு எதிரானது கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினியின் அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ரஜினியின் அறிக்கை பாஜகவுக்கு எதிரானது கிடையாது.மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்னையை தீர்த்தது யார் என மக்களுக்கு தெரியும்.மக்களவை தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.