புல்வாமா தாக்குதல்: வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்!!சீமான்
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்காத துயரத்தைத் தருகிறது.அதில் தமிழர்கள் இருவர் என்பதையறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.