புல்வாமா தாக்குதல்:அனைத்து வீரர்கள் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி !!ஆந்திர முதல்வர்
தாக்குதலில் வீர மரணமடைந்த அனைத்து வீரர்கள் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த அனைத்து வீரர்கள் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.