சகோதரிகளாக களமிறங்கும் சிம்ரன் மற்றும் த்ரிஷா….!!!
இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்ரன் மற்றும் த்ரிஷா நடிக்கவுள்ளனர். இந்த படத்தில், சிம்ரன், த்ரிஷா இருவருமே அக்கா தங்கையாக நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன், “கடலுக்கு அடியில் சாகசங்களும், சண்டைக் காட்சிகளும் நிறைந்த படமாக இது இருக்கும். இன்னும் இப்படத்துக்குப் பெயரிடப்படவில்லை.
மேலும், மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், தற்போது த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவருக்குமே கடல் சார்ந்த சாகசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.