காஷ்மீர் தாக்குதல்:தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!!முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Default Image

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க  முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழந்துள்ளார்.அதேபோல் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்துள்ளார்.தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Image result for crpf tamilnadu subramanian

பின் தாக்குதலுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்தார்.அதேபோல்  தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில்  பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணடைந்த சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்