இந்த இலையில் இவ்வளவு நன்மைகளா…? இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…?
இயற்கை இறைவன் கொடுத்த வரம் என்பதை ஒவ்வொரு தாவரங்களும் நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்ட இலை என்றே கூறலாம்.
பொதுவாக கறிவேப்பிலையை உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் ஒரு இலை. இது சமையலில் மட்டுமல்லாது உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.
கறிவேப்பிலையில், வைட்டமின் ஏ,பி, பி2, சி மற்றும் கால்சியம், இரும்புசத்து போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த பதிவில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம்.
உடல் எடை
கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை உருவாக்கி உடல் எடையை குறைக்க இது உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த இலையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இருதய பிரச்சனை
கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிடுவதால், இதயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது இருதய நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
இதயத்தை பாதுகாத்து நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இரத்தம்
கறிவேப்பிலையை தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள கிருமிகளை அளிக்க உதவுகிறது.
இரத்த சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் இரத்த சோகை நோயில் இருந்து விடுதலை அளிக்கிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
செரிமானம்
செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வை அளிக்கிறது. நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையோடு இருப்பவர்கள், கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கி விடும்.
முடி வளர்ச்சி
இன்றைய இளம் தலைமுறையினரின் பெரிய பிரச்சனையே இந்த கூந்தல் பிரச்சனை தான். இந்த பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், முடி நன்கு வளருவதோடு, கருமையாகவும் வளரும்.
கல்லீரல்
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து வந்தால், கல்லீரல் பிரச்னைகள் நீங்கும். தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி விடும். மேலும் கறிவேப்பிலையை ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சளி தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.