டைட்டிலால் சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி..!போஸ்டரால் கொந்தாளித்த தயாரிப்பு..!
நடிகர் விஜய் சேதுபதி என்றாலே மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு.அதே போல அவரின் படங்களுக்கும் குடும்பமாக ரசிகர்கள் வருகை தருகிறார்கள். இதனாலே னிமாவில் அவரின் மளமளவென செல்வாக்கு உயர்ந்து வருகிறது.
அண்மையில் இவருடைய நடிப்பில் வந்த 96 படம் நல்ல வரவேற்பை பெற்று 100ம் நாள் கொண்டாட்டத்தை எட்டியது.தற்போது சாலை முழுக்க போட ஒரு பொண்ணு வேணும் என்ற இரட்டை அர்த்தத்தில் எழுதியிருந்த போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி இந்த போஸ்டரை வெளியிடுவதாக முதலில் தகவல் வெளியானது.இந்த போஸ்டர் சர்ச்சையான பின்னர் அது படத்தின் ஒரு டைட்டில் என்று தெரியவந்தது. இதனால் நடிகர் விஜய் சேதுபதியின் பேருக்கு களங்கத்தை உண்டாகி உள்ளது.
இந்த படத்திற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டிவிட்டர் பதிவில் அந்த படத்தின் போஸ்டரையும் மற்றும் படக்குழுவையும் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர் இந்த மாதிரி பப்ளிசிட்டி பண்ணி ஒரு புதிய படத்தை புரோமோட் பண்றதுக்கு பதிலாக வேறு எதாவது தொழில் செய்யலாம் என்றும் தமிழ் சினிமாவை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி இது இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த மாதிரி பப்ளிசிட்டி பண்ணி ஒரு புதிய படத்தை புரோமோட் பண்றதுக்கு பதில், வேறு எதாவது தொழில் செய்யலாம். தமிழ் சினிமாவை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி. வன்மையாக கண்டிக்கிறேன் ✍️✍️✍️???????? pic.twitter.com/cZyY8y6DJ6
— G Dhananjeyan (@Dhananjayang) February 14, 2019