தீவிரவாதிகள் தாக்குதல்!! 4 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!!

Default Image

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, புல்வாமா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 4 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காஷ்மீரில் உள்ள  ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

Image result for kashmir

 

அப்போது  புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, புல்வாமா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 4 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்