நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ இருவரும் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தை ரசிகர்கள் தளபதி 63 என்றே அழைத்து வருகிறார்கள்.
இந்த படம் ஸ்பெஷல் தினத்தில் வெளியாகும் என்று ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தில் குழந்தைகள் மற்றும் நடன கலைஞர்கள் என 100க்கும் அதிகமானோர் இடம்பெற்ற ஒரு பாடல் இந்த படத்தில் இருப்பதாகவும் மேலும் படத்தில் நடிகர் விஜய்க்கு மைக்கேல் என்ற பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் படக்குழுவினர் சென்னையின் முக்கிய இடமான நேப்பியர் ப்ரிட்ஜை இந்த ப்ரிட்ஜை அப்படியே ஒரு பெரிய ஸ்டூடியோவில் செட் போட்டு உள்ளார்களாம்.
அந்த ப்ரிட்ஜில் எடுக்கப்படுவது முக்கிய காட்சி என்பதால் தான் இந்த செட் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.