பிரதமர் மோடியின் சொல்படி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் -சஞ்சய் தத்
பிரதமர் மோடியின் சொல்படி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கூறுகையில், புதுச்சேரி மக்களுக்காக நாராயணசாமி போராடி வருகிறார்.பிரதமர் மோடியின் சொல்படி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார்.
கிரண்பேடி போல் எந்த ஒரு ஆளுநரும் செயல்படவில்லை. சாலை விதிமீறல்களை துணை நிலை ஆளுநர் கண்காணிப்பதா…தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும்போது புதுச்சேரியில் ஏன் கொடுக்கக் கூடாது… மக்களின் விருப்பத்திற்கு எதிராக கிரண்பேடி செயல்படுகிறார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.