நல்ல திசையை நோக்கி கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது – தமிழக பாஜக தலைவர் தமிழிசை
நல்ல திசையை நோக்கி கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், சவால்களையும், சதிகளையும் கடந்து மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்து, மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3-வது ஆண்டில் தொடரும் முதலமைச்சர் பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் .அதேபோல் நல்ல திசையை நோக்கி கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது .விரைவில் நல்ல செய்தியை அறிவிப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.