ஜெர்ஸி படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா…?
நடிகர் நானி தமிழ் சினிமாவில் நான் ஈ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெர்ஸி படம் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ளது.
இதனையடுத்து, இந்த படம் தமிழிலும் டப் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது.