விஷாலுக்கு, இன்று மதியம் 3 மணி வரை கெடு : மறுபரிசீலனைக்கு வாய்ப்பு
ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டதும், செய்திகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஓடிகொண்டிருக்கிறது. வேட்புமனுதாக்கல் தொடங்கியதும் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என கட்சிகள் மட்டுமல்லாது தினகரன், விஷால், தீபா போன்றவர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில் விஷால், தீபா போன்றோர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் விஷால் மனு முதலில் நிராகரிக்கப்பட்டு பிறகு அவரது விளக்கத்துக்கு பிறகு ஏற்றுகொள்ளபட்டு பின், சக வேட்பாளர்களின் கடும் எதிர்ப்பால் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷாலை முன்மொழிந்தவர்களில் 2 பேர் தாங்கள் கையெழுத்திடவில்லை என கூறியதால் அவரது மனு தள்ளுபடி செய்யபட்டது.
இதனால் கோபமடைந்த விஷால் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்தார். முதலில் தாமதமாக பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டு, பிறகு ஏற்றுகொள்ளபட்டு, பிறகு நிராகரிக்கப்பட்ட விவரத்தை கூறினார். இதனை ஏற்று கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி இன்று மதியம் 3 மணிக்குள் கையெழுத்திடவில்லை என கூறிய 2 பேரும் நேரில் வந்து விளக்கமளித்தால் மறுபரிசீலனைக்கு வாய்ப்புள்ளது என்றது.