மதுஅருந்த குறைந்தபட்ச வயது இனி 23 : கேரளா அரசு அதிரடி
கேரளா மாநிலத்தில், மது அருந்துவோரின் குறைந்தபட்ச வயது 23 ஆக உயர்த்த என்று கேரளா முதலமைச்சர் பிரணாயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே மதுகுடிப்போருக்கான குறைந்தபட்ச வயது 21ஆக இருந்தது.
இதற்காக உரிய சட்ட திருத்தம் செய்வதற்க்காக அவசர சட்டம் பிறப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்குமாறு கவர்னர் பி.சதாசிவத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் இனி கேரளாவில், 23 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மட்டும்தான் மது அருந்த அனுமதி உண்டு.