தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்-தம்பிதுரை
தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவோம். மத்திய அரசு குறுக்கிடும்பட்சத்தில் அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.கரூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளது தொடர்பாக கூறுகையில்,ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.அதிமுகவில் தொகுதி பங்கீடு குறித்து முடிவுசெய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளதால், உரிய நேரத்தில் அந்த குழு முடிவு செய்யும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.