” சபரிமலையில் மீண்டும் பெண்கள் ” அதிகரிக்கும் பதற்றம்…!!
சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த நிலையில் ஏற்றுக்கொள்வதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்ட நிலையில் நேற்று பூஜைகள் எதுவும் நடத்தப்படாத நிலையில், இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு நெய்யபிஷேகம் செய்யப்பட்டது.அசம்பாவிதங்களை தவிர்க்க 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 17ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும்.இந்நிலையே சபரிமலையில் வழிபட பெண்கள் குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சபரிமலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது .இதையடுத்து நிலக்கல் முதல் சன்னிதானம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது