போட்டியை டிரா செய்தும் புதிய சாதனை படைத்த இந்தியா
இந்தியா இலங்கை கிரிகெட் அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் தொடர் நடைபற்றது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. பிறகு இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்க்சில் 536 ரன்கள் எடுத்து 7 விகேட்டுகளை இழந்து இருந்த நிலையில் டிக்ளேர் சித்தது. பிறகு தனது முதல் இன்னிங்க்சை விளையாடிய இலங்கை அணி 373 ரன்னுக்கு அனைத்து விகேட்டுகளையும் பறிகொடுத்தது. பிறகு தானது இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இந்திய அணி இலங்கை அணியைவிட 409 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதனால் 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி தோல்வியை விரட்ட போராடி 5 விக்கெட் மட்டுமே விட்டுகொடுத்து டிரா செய்தனர். அப்ப்போது இலங்கை அணி 299 ரன்னுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்தது.
இதன்மூலம் 3 டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ந்து 9 டெஸ்ட் தொடரை வென்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்க்கு முன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர் வென்று சாதனை படைத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.