ஏழுமலையான் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே….!!
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்தார்.மேலும் அவர் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது தேவஸ்தான அதிகாரிகள் ராஜபக்சே_வுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்சே சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது என்றும் , இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவாதம் குறித்து சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.