ஆஸ்திரேலிய தொடர் :அணியில் இவர்கள் எல்லாம் இல்லை…!இவர்கள் மட்டும் ..!
ஆஸ்திரேலிய அணியானது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. வருகின்ற 24 தேதி முதல் 20 ஓவர் போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது.தொடரின் 2 வது ஆட்டம் பெங்களூரில் 27 தேதி நடைபெறுகிறது.
மேலும் இந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5 மற்றும் 8, 10 ,13 தேதி ஆகிய தேதிகளில் ஐதராபாத், நாக்பூர் மற்றும் ராஞ்சி, மொகாலி, டெல்லியில் நடக்கிறது.இந்த போட்டிக்களுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.இந்த போட்டி ஆனது உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெறும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதால் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோருக்கு சில ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்படலாம்.
இதில் அவர்களுக்கு பதிலாக தொடக்க வீரர் வரிசையில் ரகானே மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நியூசிலாந்து தொடரில் பாதியில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் வீராட்கோலி இந்த தொடரில் அணிக்கு மீண்டும் திரும்புகிறார். இதேபோல வேகப்பந்து வீரர் பும்ராவும் அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் காயம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் வேகப்பந்து வீரர்களும் மற்றும் சுழந்பந்து வீரர்களும் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில் இதில் மிடில் ஆர்டர் வரிசையிலும் அணி மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும் இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பயணத்தில் சிறப்பாக விளையாடி அதில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தொடக்க வீரர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ரகானே மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாட வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் பட்டார தகவல் கசிந்து வருகிறது.