கேபிள் டிவி புதிய கட்டண முறை!!அவகாசம் மார்ச்-31ஆம் தேதி வரை நீட்டிப்பு!!
கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச்-31ஆம் தேதி வரை நீட்டித்து ட்ராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் பற்றி சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.அதில் வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153 .40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டது.மேலும் இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படிருந்தது.
இதனிடையே டிராயின் இந்த புதிய கட்டண விதிகளுக்குதமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச்-31ஆம் தேதி வரை நீட்டித்து ட்ராய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.