காதலர் தினத்தை பாசுந்தியுடன் கொண்டாடுவோம்….!!

காதலர் தினம் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் உணவு வகைகள் என்றால், அது இனிப்பான உணவுகள். அந்த இன்று நாம் பசுந்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கெட்டியான பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை – அரை கப்
  • குங்குமப்பூ – சிறிதளவு
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • பிஸ்தா –  2 டேபிள் ஸ்பூன் ( நறுக்கியது )
  • பாதாம் – 2 டேபிள் ஸ்பூன் ( நறுக்கியது )
  • முந்திரி – 2 டேபிள் ஸ்பூன் ( நறுக்கியது )
  • முந்திரி தூள் ( அரைத்தது ) – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும் போது 10 – 15 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து, பால் பாதியாக வற்றிய பின்பு  பிஸ்தா, பாதாம், முந்திரி, முந்திரி தூள் சேர்த்து கிளற வேண்டும். பின் சர்க்கரையை சேர்த்து கெட்டியாகும் வரை கிளற வேண்டும். கெட்டியான தோற்றம் வரும் போது குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து கிளற வேண்டும். இப்பொது சுவையான பாசுந்தி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment