இந்தியா – இலங்கை இடையே டி20 ஆட்டம் இன்று தொடக்கம்

இந்தியா – இலங்கை இடையேயான டி20 ஆட்டம் இன்று கொழும்பில் நடைபெறுகிறது.
இந்திய அணி, மூன்று ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரையும், ஐந்து ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது.இதனால் இந்திய அணி மிகுந்த பலத்தை கொண்டுள்ளது.
தொடர் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை, தனது டி20 அணியில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரே வான்டர்சே, ஆல்ரவுண்டர் டாசன் சனகா புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த சுரங்கா லக்மல் அணிக்கு திரும்ப, சுழற்பந்துவீச்சாளர் சண்டகன், விஷ்வா, சமீரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆட்டத்திலாவது வெற்றியைப் பெற்று விடவேண்டும் என்ற கட்டாயத்தோடு களம் காணுகிறது இலங்கை அணி .
author avatar
Dinasuvadu desk

Leave a Comment