கமல் எங்களுக்கு வேண்டாம்…உதறிய காங்கிரஸ்…!!
தமிழக காங்கிரஸ் கமிட்டின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் KS.அழகிரி . மேலும் அவர் பலமுறை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் இணைய வேண்டும்என்று கோரிக்கை வைத்து வந்தார்.
மேலும் அவர் கூறுகையில் கமலஹாசன் மதச்சார்பற்ற கருத்துடையவர் அவருடைய கருத்தும் எங்கள் கூட்டணி கட்சிகளின் கருத்தும் பல்வேறு இடங்களில் இணைந்து போகிறது எனவே ஒத்த கருத்துடையவர்களை ஒன்றிணைப்பது எங்களுடைய அணியை மேலும் பலமாகும் என்று அவர் தெரிவித்தார். இப்படி காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறை அளித்திருந்த சூழலில் இன்று கமலஹாசனுக்கு KS. அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் திமுகவை கமலஹாசன் விமர்சனம் செய்தது என்னுடைய கவனத்துக்கு வரவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் எங்கள் கூட்டணியில் இணைவது தொடர்பாக திமுக தான் முடிவு செய்யும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் KS. அழகிரி தெரிவித்துள்ளார்.