களமிறங்கும் ரிக்கி பாண்டிங்…மீண்டும் எழுமா வலுவான ஆஸ்திரேலிய அணி….!!
ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட இருக்கின்றார்.
சமீப காலமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்பாடு கடும் விமர்சனத்துள்ளாகியுள்ளது.இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் பதவி விலகினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக தனது பணியை தொடங்க இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.இவர் 2003 , 2007 என தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்ற போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் செயல்பட்டார். தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.