செங்கல்பட்டில் ஆதியோகி ரதம்: மக்கள் உற்சாக வரவேற்பு

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கோவையில் இருந்து செங்கல்பட்டு வந்த ஆதியோகி ரதத்துக்கு மக்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 25-வது மஹா சிவராத்திரி விழா வரும் மார்ச் 4-ம் தேதி 112 அடி ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் சத்குருவின் அருளுரை, நள்ளிரவு தியானம், தலைசிறந்த கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், மஹா அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மேலும், ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சம் மற்றும் சர்ப்ப சூத்திரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

மக்கள் ஆதியோகியை தரிசிக்கும் விதமாக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் 5 ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள ஆதியோகியில் இருந்து கடந்த ஜனவரி 21-ம் தேதி புறப்பட்ட ஒரு ரதம் செங்கல்பட்டு பகுதிக்கு இன்று வருகை தந்தது.
செங்கல்பட்டில் உள்ள ஈஷா நர்சரியில் காலை 8.30 மணிக்கு குரு பூஜையுடன் ரத ஊர்வலம் தொங்கியது. அங்கிருந்து மேட்டு தெரு, கைலாஷ் நகர் சிவன் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், ரத்தினகிணறு உள்ளிட்ட பகுதிகள் வழியாக ராமர் கோவிலை வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் பள்ளிக்கு ஆதியோகி ரதம் சென்றது.

ரதம் சென்ற இடத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் ஆதியோகியை தரிசனம் செய்தனர். இதையடுத்து, திரளபதி அம்மன் கோவிலுக்கு ஆதியோகி ரதம் சென்றது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் இந்த ரதம் மார்ச் 3-ம் தேதி கோவை சென்றடையும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment