200,00,00,000 ஒதுக்கீடு….மாட்டு கொட்டகை அமைக்கும் உ.பி அரசு….!!
உத்திரபிரதேச மாநிலத்தில் மாட்டு கொட்டகை அமைக்க 200 கோடி ஒதுக்கியுள்ளது பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலம் உத்தரபிரதேசம்.இந்த மாநில முதல்வராக யோகி ஆதித்தயநாத் இருந்து வருகின்றார்.இந்நிலையில் சமீபத்தில் உத்தரபிரதேச மாநில சட்ட பேரவையில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அம்மாநில நிதி அமைச்சர் ராஜேஷ் அகர்வால் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு தலா 1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் மாடுகளுக்கு கொட்டகை மக்கும் (கோசாலை ) திட்டம் என்ற பெயரில் ரூ 200 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.இதில் மக்களை விட மாட்டை பாதுகாக்கும் அரசு என்று பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.