ஆஸ்திரேலியா கிரிக்கெட் பயிற்சியாளராக கிரிக்கெட் ஜாம்பவான் நியமனம்..!

Default Image

50 ஓவர்க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் படு ஜோராக தொடங்குகிறது. இதில் பங்கேற்க இருக்க கூடிய  10 அணிகளும் தங்களை பலப்படுத்தி தயார் செய்து வருகிறது. மேலும் ஏப்ரல் மாதம் இடையில் ஒவ்வொரு அணியும்  தங்களது அணியில் இடம்பிடித்துள்ள 15 வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி அனுப்ப வேண்டும்.

Image result for ஆஸ்திரேலியா கிரிக்கெட்மேலும் இந்த தொடர்களை ஒவ்வொரு அணிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று உலகக்கோப்பை தொடரில் விளையாடிய உடனே ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது.

Related image

ஆஸ்திரேலியா அணிக்கு உலகக்கோப்பை தொடர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல தான் இந்த ஆஷஸ் தொடரும் முக்கியம். மேலும் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த உடனே  ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள  கிரேம் கிக்கை ஆஷஸ் தொடருக்கு வீரர்களை தயார் செய்வதற்கான பணிகளில்  ஈடுபடுத்த இருக்கிறது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

Image result for ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேலும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை அந்த அணியின் துணை பயிற்சியாளராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆனது  நியமித்துள்ளது.

மேலும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 2003 மற்றும் 2007 ஆண்டுகளில்  நடைபெற்ற உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்