ராமர் கோயில் கட்டுவது உறுதி…உ.பி முதல்வர் நம்பிக்கை…!!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்திய நாத் ராமர் பிறந்ததாக கூறப்படும் குறிப்பிட்ட இடத்திலேயே கோவில் கட்டப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும் அவர் கூறுகையில் , கும்பமேளாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பூஜை செய்து விட்டு செல்வதாக அவர் தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றும் இதில் குழப்பம் ஏதும் தேவையில்லை என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்