மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கிளையை தொடங்கி வைத்து பல்வேறு திட்டத்தை தொடக்கி வைத்தார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் இடதுசாரிகள் ஆகியவை மேற்கு வங்க மக்களின் நலன்களை கண்டுகொள்வதில்லை. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோதமாக சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் தொழில் வளர்ச்சி பின்தங்கியதாகவும் , மாநில அரசு மக்களின் மீது அக்கறை காட்டவில்லை என்றும் மோடி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் , ஊழல் கறைபடிந்த அதிகாரியை காக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போராட்டம் நடத்தியதாக தெரிவித்த அவர் மம்தா பானர்ஜி அரசு ஊடுருவல்காரர்கள் வரவேற்பதாகவும் பாஜக தலைவர்களை தடுப்பதாகவும் மோடி குற்றம் சாட்டினார்