7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா?மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Default Image

ஸ்டாலின் சொன்னது போல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, எல்லோருக்கும் பயன்தரும் நாட்டு சுரைக்காய் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் உரை சங்கீத வித்துவான் போன்று இருந்ததுமக்களுக்கு உதவாக்கரை பட்ஜெட். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை .4 லட்சம் கோடியை வருவாயை பெருக்க எந்த அறிவிப்பும் இல்லை என்று முக.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

இந்நிலையில் முக.ஸ்டாலின் கருத்து தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மாநில வளர்ச்சி 10% உயர்ந்துள்ளது, வருவாய் பற்றாக்குறை ரூ.5 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.ஸ்டாலின் சொன்னது போல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, எல்லோருக்கும் பயன்தரும் நாட்டு சுரைக்காய்.சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா? அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்கள். 7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்