தமிழ்நாட்டை கொள்ளையடிக்க பட்ஜெட்…ஸ்டாலின் காட்டமான விமர்சனம்…!!
தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ,இந்த பட்ஜெட் மக்களுக்கு பயன்படாத பட்ஜெட் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை.வருவாயை பெருக்க எந்த அறிவிப்பும் இல்லை.கொட நாட்டை கொள்ளைபடிப்பது போன்று தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அமைந்ததுதான் இந்த பட்ஜெட் என்று காட்டமாக சாடியுள்ளார்.