சூனாப்பானா போச்சே! இனி காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட போறாங்களாம்! அதிர்ச்சியில் காதலர்கள்!
காதல் என்றாலே அதற்கு ஒரு தனித்துவம் எப்போதுமே இருக்கும். காதலுக்கு பலர் இன்றும் என்றும் இந்த பூமியில் சிறந்த எடுத்து காட்டாக உள்ளனர். லைலா-மஜுனு, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதி இப்படி உதாரணத்திற்கு பல காதல்களை சொல்லி கொள்ளலாம். காதலை போற்ற கூடிய தினமாக “காதலர் தினம்” உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், இன்று இந்த காதலர் தினத்திற்கே வெட்டு வந்துள்ளதாம். இங்கு ஒரு நாட்டில் காதலர்கள் தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாம். இப்படிப்பட்ட்ட நாடு எதுவென இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காதலர்கள் பலவிதம்
காதலர் தினம்ஒன்று என்றாலும் அதை கொண்டாடும் காதலர்களும், காதலும் எப்போதுமே பலவிதமாக உள்ளது. காலத்திற்கேற்ப காதலும் பரிணமித்து வருகிறது. உதாரணத்திற்கு புறாவில் தூது விடுவதற்கு பதிலாக மெசேஜ் அனுப்புவது, வீட்டிற்குள்ளே காதலை தெரிவிப்பதற்கு பதிலாக வெளியில் சென்று சந்தோஷமாக கொண்டாடுவது…இப்படி பலவிதங்களிலும் மாற்றம் பெற்று வருகிறது.
காதலுக்கே ஆப்பு!
மற்ற நாடுகளில் காதலர் தினத்தை மிக பிரமாண்டமாக கொண்டாட, இந்த ஒரு நாட்டில் மட்டும் இனி காதலர் தினத்தை கொண்டாட கூடாது என அந்நாட்டின் அரசே அறிவித்துள்ளது. இப்படி ஒரு உத்தரவை போட்ட நாடு எதுன்னு தெரியுமா?
அண்டை நாடு!
காதலர்களின் இதயத்தை சுக்கு நூறாக உடைக்க கூடிய இப்படிப்பட்ட அறிவிப்பை தெரிவித்த நாடு பாகிஸ்தான் தான். காதலர் தினத்தில் கட்டாயப்படுத்தி திருமணங்கள் கடந்த ஆண்டுகளில் நடந்ததால் இப்படி ஒரு மோசமான அறிவிப்பை பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
சகோதரிகள் தினமா?
“எறியிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போல” இந்த உத்தரவை தாண்டி மேலும் ஒரு சிறப்பான சம்பவத்தை அந்த நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று செய்துள்ளது. அதாவது, காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக இனி கொண்டாட வேண்டும் என இந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விமர்சனங்கள்
காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்பதை பாகிஸ்தான் அரசு கொன்னதை ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்சாக போட்டு கலாய்த்து வருகின்றனர். இதை கேட்ட பின்னர் இதை பற்றிய பல்வேறு எதிர் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக மாற்றிய இத்தகைய செயலை பற்றி உங்களின் கருத்தையும் இங்கு பதிவிடலாம்.