கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன் : காஜல்
காஜல் அகர்வால் தனது இயல்பான குணத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் போய் சும்மா உட்கார்ந்து விடுவோமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை.
நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.